Latestமலேசியா

பாலியல் வீடியோ: ‘நாங்கள் அதில் சம்பந்தப்படவில்லை’ – அன்வார்

போர்ட்டிக்சன், ஜூன் 16 – அண்மையில் பிகே ஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலியைச் சம்பந்தப்படுத்திய பாலியல் வீடியோவில் தாமோ அல்லது தமது ஆதரவாளர்களோ சம்பந்தப்படவில்லை என அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அப்படி செய்வதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்றும், அஸ்மின் தாம் பிரதமராவதற்குத் தடையாக இருப்பதாகக் கூறப்படுவதையும் அன்வார் மறுத்தார்.

மகாதீருக்குப் பின், தாம் பிரதமராவதற்கு இதற்கு முன்னரே ஒப்புக் கொள்ளப்பட்டது. பக்காத்தானின் உறுப்புக் கட்சிகளும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. நிலைமை இவ்வாறு  இருக்கும்போது,  தாமும் தமது ஆதரவாளர்களும் அஸ்மினின் அரசியல் வாழ்வைக் கீழறுக்க வேண்டிய எந்தக் காரணமும் இல்லை என அன்வார் சுட்டிக்காட்டினார்.

பதவி விலக மகாதீர் காலக் கெடுவை அறிவிக்க வேண்டுமென்றும் பாலியல் வீடியோ விசாரணை முடியும் மட்டும் அஸ்மின் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் இயக்கம் ஒன்று வலியுறுத்தியது குறிப்பிட்ட அன்வார், அது அவர்களின் கருத்து, அதில் தாம் உடன்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker