Latestமலேசியா

பி-40 பிரிவினரின் மெட்ரிக்குலேஷன் விண்ணப்ப முடிவுகள் நாளை அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூன்.16-

பி-40 எனப்படும் வறுமைப்  பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் மெட்ரிக்குலேஷன் கல்வி விண்ணப்பத்திற்கான முடிவுகள் நாளை வெளியிடப் படவுள்ளன என கல்விமைச்சு அறிவித்துள்ளது.

பி -40 பிரிவைச் சேர்ந்த திறமை வாய்ந்த மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் கல்வி பயில்வதற்கு கூடுதல் இடம் வழங்க கல்வியமைச்சு கடந்த மே 29 தேதியன்று அமைச்சு முடிவெடுத்தது.

அதன் அடிப்படையில் அப்பிரிவைச் சேர்நத மாணவர்கள் இக்கல்வி திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நாளை மதியம் முடிவுகள் அறிவிக்கப்படும்.

விண்ணப்பம் செய்த மாணவர்கள்www.moe.gov.my என்ற அகப்பக்கத்தில் இம்முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என இது தொடர்பில் அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker