Latestமலேசியா

‘மனைவி பிரசவம்: கணவருக்கு விடுமுறையா? முடியாது’ -முதலாளிகள்!

கோலாலம்பூர், ஜூன் 16 – மனைவி பிரசவத்தின் போது, கணவருக்கு மூன்று நாள் விடுமுறையை அளிக்கும் செலவினை ஏற்க முதலாளிகளால் முடியாது என முதலாளிமார் சங்கங்களின் சம்மேளனம்(எம்இஎஃப்) குறிப்பிட்டுள்ளது..

மனிதவள அமைச்சு பரிந்துரைத்துள்ள அதனைச் செயல்படுத்தினால் முதலாளிகளுக்கு ஆண்டொன்றுக்கு 15.72 கோடி அல்லது நாளொன்றுக்கு 5.24 கோடி ரிங்கிட் செலவாகும் என எம்இஎஃபின் செயல்முறை அதிகாரி சம்சுடின் பர்டான் குறிப்பிட்டார்.

அந்த மூன்று நாளுக்கான சம்பளத்தை சொக்சோ அல்லது தொழிலாளர் காப்புறுதித் திட்டமோ ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

மேலும், தனியார் துறை வழங்கும்  60 நாள் பிரசவ விடுமுறைக்குப் பதிலாக 98 நாள்களாக உயர்த்துவதன் செலவையும் சொக்சோ ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker