Latestமலேசியா

ஸாக்கீர் நாயக் விவகாரம்:   இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக கோரவில்லை!  – வான் அஸீசா

கோலாலம்பூர், ஜூன்.16-

சர்ச்சைக்கூரிய சமய போதகர் ஸாக்கீர் நாயக்கை திரும்பி அனுப்பக்கோரி இந்திய அரசு இதுவரை மலேசியாவிடம் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை முன்வைக்கவில்லை என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஜிஸா தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் நான் அரசாங்கத்திடம் கேட்டறிந்தேன். ஆனால் இந்தியா அவரை திரும்பி அனுப்பக்கோரி நம்மிடம் இது வரை அதிகாரப்பூர்வமாக ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.

மேலும் இவ்விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீரின் நிலைபாட்டினை நான் ஆதரிக்கின்றேன் என இன்று நடைபெற்ற அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

முன்னதாக ஸாக்கீர் நாயக்கை திருப்பி அனுப்பக் கோரி இந்திய அமலாக்கப் பிரிவு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ஸாக்கீர் நாயக்கை திரும்பி அனுப்பினால் அங்கு அவரின் நிலை என்னவாகும்? இவ்வழக்கு எவ்வாறு நடைபெறும் என்பதை முன்கூட்டியே இந்திய அரசு மலேசியாவிடம் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவரை திரும்பி அனுப்புவது குறித்து நாம் முடிவெடுப்போம் என பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker