Latestமலேசியா

(video) -இன்று துன் சம்பந்தனின் 100-ஆவது பிறந்த நாள்! ‘வணக்கம் மலேசியா’வின் காணொளி ஆவணம்!

வரலாறு என்பது மனித இனத்தின் சுவடுகளே… அத்தகைய சுவடுகளை பதியம் செய்த மாமனிதர்கள்- எல்லா எல்லா இனங்களிலும் எல்லா சமுதாயங்களிலும் வெகு சிலராகவே இருப்பர்…

மலேசிய இந்திய சமுதாயத்தின் வரலாற்றைச் சுமந்து நிற்கின்ற தூண்களில் குறிப்பிடத்தக்க தூண் என்றால்- அது, துன் வீ. தி. சம்பந்தன் ( திருஞான சமபந்தன் வீராசாமி) தவிர வேறு யாராக இருக்க முடியும்?

இன்று ஜூன் 16ஆம் தேதி.., மலேசிய இந்திய காங்கிரசின் ஐந்தாவது தேசியத் தலைவரான துன் சம்பந்தனுக்கு நூறாவது பிறந்த நாள்..!

நகைச்சுவை உணர்வும், சரளமாக அனைவருடனும் உரையாட தயங்காத குணமும் அவரது இயல்பு… எவரையும் எளிதில் கவரக் கூடிய சாதுர்யம் மிக்க மனிதர்- தலைவர் என்ற புகழுக்கு உரியவர்.

1919 ஆம் ஆண்டு ஜூலை 16இல் சுங்கை சிப்புட்டில் பிறந்த அவர், 1979 ஆம் ஆண்டு மே 18- இல் இயற்கை எய்தினார்.

மலாயா சுதந்திரப் போராட்டத்தில் மலாய், சீன மற்றும் இந்திய சமுதாயம் எனும் மூவினத்தின் பங்களிப்பு அளப்பரியது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31ஆம் தேதி மெர்டேக்கா உடன்பாட்டின் அடிப்படையில் மலாயா சுதந்திரம் பெற்ற போது- அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பெருமைக்குரிய தலைவர்கள் துங்கு அப்துல் ரகுமான், டான் செங் லோக் ஆகியோருடன் துன் சம்பந்தனும் ஒருவராவார்.

துன் சம்பந்தனின் நூற்றாண்டு பிறந்த நாள்- அவரது வரலாற்றுச் சுவடுகளை சற்று திரும்பிப் பார்க்க வேண்டிய முக்கியமான தருணம் அல்லவா இது….

துன் சம்பந்தன் எனும் மாமனிதர் பற்றிய ஒரு காணொளி பதிப்பை ‘வணக்கம் மலேசியா” தனது வாசகர்களுக்காக இங்கே சமர்ப்பிக்கிறது…

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker