Latestமலேசியா

அமலாக்க அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ பதிவு

ஷா ஆலம், ஜூன் 17 –  கிளானா ஜெயாவில் அமலாக்க அதிகாரி ஒருவர் பேரங்காடியில் உள்ள கடை ஒன்றில் லஞ்சம் வாங்குதாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வரைலாகப் பரவி வருகிறது.

15 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவில், காசாளர் ஒருவர் காகிதத்தில் சுற்றப்பட்ட பணத்தை அந்தச்  சீருடையில் இருந்த அமலாக்க அதிகாரியிடம் தருவது காணப்படுகிறது.

சில காலமாக அமலாக்க அதிகாரிகள் கையூட்டை நிர்ப்பந்தித்து வாங்கி வருவதாகப் பல கடைக்காரர்கள் தம்மிடம் புகார் தெரிவித்துள்ளதாகப்  பெட்டாலிங் ஜெயா முன்னாள் கவுன்சிலர் சீன் ஊன் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவித்தார்.

வீடியோ பதிவில் அமலாக்க அதிகாரியின் முகம் தெளிவாகத் தெரிவதாகவும், வீடியோ பதிவு வெளியானவுடன், சம்பந்தப்பட்ட அதிகாரி அந்தக் கடைக்கு மீண்டும் சென்று கடைக்காரரிடம் பேச வேண்டுமென வற்புறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் நோன்புப் பெருநாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்ததாகவும் கடைக்காரர்களிடமிருந்து  100-லிருந்து 300 ரிங்கிட் வரை கேட்கப்பட்டதாகவும் தவறினால் 1,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்படும் என அச்சுறுத்தப் பட்டதாகவும் தெரிகிறது. இது பற்றி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திடம் விசாரித்தபோது, பதில் ஏதும் தரப்படவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker