Latestமலேசியா

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தல்: அனைத்து பதவிகளுக்கும் போட்டி!

ஈப்போ, ஜூன்.17- எதிர்வரும் 23 ஆம் தேதி ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் 78 ஆவது ஆண்டுக் கூட்டமும் தேர்தலும் நடைபெறவிருக்கிறது.  அதன் தொடர்பாக அந்த தேர்தலில் போட்டியிருக்கும் வேட்பாளர்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அதில் அனைத்து பதவிக்கும் போட்டி நிலவுகிறது. அதன் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று இங்குள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. அதன் தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் எம். மதியழகன் செலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் ஈப்போ தேவஸ் தானத்தின் தலைவர் வீ.சுப்பையாவை எதிர்த்து சபாவின் முன்னாள் செயலாளர் எம். விவேகானந்தா போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

துணைத் தலைவர் பதவிக்கு நடப்பில் உள்ள ஆர். சீத்தாராமனை எதிர்த்து எம். சௌந்திரபாண்டியன், மற்றும் கே. சண்முகமதாஆகியோர் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு பி. மாதவன் மற்றும் ஆர். ஜெயசேகரன் ஆகிய இருவரும் மோதுகின்றனர்.

துணைச் செயலாளர் பதவிக்கு எம். குமரகுருவுக்கும், கே.சுரேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். பொருளாளர் கே. ஆண்டாள் நேசனை எதிர்த்து ஆர். சுப்பிரமணியம் போட்டுயிடுகிறார்.

உட்கணக்காய்வாளர்களாக எஸ். கிருஷ்ணன், ஜெயராஜ் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எட்டு நிர்வாக குழு பதவிகளுக்கு 15 பேர் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்க விரும்பினால்  இம்மாதம் 19 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று வழக்கறிஞர் மதியழகன் கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker