Latestவிளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தானை நொறுக்கி அள்ளியது இந்தியா!

லண்டன், ஜூன். 17- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட்கவுரவப் போரில் மீண்டும் இந்தியா வாகை சூடியது. இந்த ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் லீகாட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. இதுவரை உலகக்கிண்ண ஆட்டம் ஒன்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது கிடையாது.

எனவே, இந்த ஆசையுடன் களமிறங்கிய பாகிஸ்தான், டாஸில் வென்ற முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய இந்தியாவின் ரோகித் சர்மா பாகிஸ்தானின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். அவர் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கிண்ண போட்டியில் இதுவொரு சாதனையாக பதிவு பெற்றது.

அதே போன்று இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 57 ரன்களையும் வீராட் கோலி 71 ரன்களையும் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. வீராட் கோலி 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதாவது இந்தியா 46.6 ஓவருக்கு 305 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

ஆட்டம் நிறுத்தப்பட்டது. அரை மணிநேரம் கழித்து மீண்டும் தொடங்கிய போது இந்தியா கூடுதலாக மேலும் 31 ரன்கள் எடுத்து மொத்தம் 336 ரன்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஆட்டத்தை முடித்தது.

இந்தியாவில் வீழ்த்த வேண்டுமானால் 337 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் கிட்டத்தட்ட 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழந்து பரிதாப நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டிருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதனால் போட்டி டி எல் எஸ் எல் முறைப்படி 40 ஓவர்களில் 306 ரன்கள் எடுத்தால் வெ பாகிஸ்தான் வெல்ல முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது எஞ்சியிருக்கும் 30 ஓவர்களில் 136 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை நிச்சயமாக பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது என்பதை தெளிவுபடுத்தியது.

முற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்திய ஆட்டத்தை அரங்கம் நிறைந்த ரசிகர்கள் கண்டு களித்தனர். கிட்டத்தட்ட நூறு கோடி தொலைக்காட்சி ரசிகர்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் இந்த ஆட்டத்தை ரசித்தனர்.

இதுவரை 7 முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுடன் மோதியுள்ள பாகிஸ்தான், ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை உலகப் போட்டியில் இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் வென்றுள்ள இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தானுடன் விளையாட வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker