Latestஇந்தியா

நடு ரோட்டில் போலீஸ்காரரை விரட்டி விரட்டி வெட்ட முயன்ற நபரால் பரபரப்பு! -(Video)

புதுடில்லி, ஜூன்.17- இந்தியாவிl பட்டப் பகலில் போலீஸ்காரர்களை விரட்டிச் சென்று வெட்டுக் கத்தியால் வெட்ட முயன்ற வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் பரபரப்பு மிக்க சாலை ஒன்றில் சீக்கியரான அந்த வேன் டிரைவருக்கு ஒரு கார் ஓட்டுநருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அந்த கார் கார் டிரைவர் அருகில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக அங்கு வந்த போலீஸ்காரர் அந்த வேன் டிரைவரை விசாரிக்க முயன்றபோது ஆத்திரமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த மிக நீண்ட வெட்டுக் கத்தியால் புகஆர் செய்த கார் ஓட்டுனரை விரட்டிச் சென்று வெட்ட முயன்றார்.

அந்த கார் ஓட்டுனரை காப்பாற்றுவதற்கு முயற்சித்த ஒருவர், வெட்டி கத்தியுடன் இருந்த அந்த வேன் டிரைவரை பின்புறமிருந்து மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபரை தாக்கிவிட்டு கையிலிருந்த வெட்டுக் கத்தியால்  போலீஸ்காரர்களையும் தாக்க முயன்ற அந்த வேன் டிரைவரை  சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பிடித்தனர்.

இந்த சம்பவத்தை உள்ளடக்கிய காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker