Latestமலேசியா

பாலியல் வீடியோ: யூகங்களுக்கு இடம் தராதீர்! – அன்வார்

கூச்சிங், ஜூன் 17 – பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்வதால், அதில் கட்சி உறுப்பினர்கள் யூகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாமென அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அதில் மறைமுகமான நபர்களின் செயல்பாடு இருக்கும் என நம்பப்படுவதால் அதனை துல்லியமாக விசாரிக்க போலீசாருக்குத் திறன் இருக்கிறது.  ஆதாரம் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் யூக அடிப்படையில் சந்தேகங்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

போலீசார் அந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்கவிருப்பதால் கட்சி மட்டத்திலான  விசாரணை தேவையில்லை என்றும் அந்த விவகாரம் சம்பந்தமாக கட்சி நெருக்கடியில் சிக்கி இருக்கவில்லை என்றும் அன்வார் அவ்வாறு  பதிலளித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker