Latestமலேசியா

பாஸ் போர்ட் படம்: மொட்டை தலையில் வெளிச்சம் பட்டு அதீத பிரதிபலிப்பு: என்ன செய்வது?

கோலாலம்பூர், ஜூன்.17- பாஸ்போர்ட் (கடப்பிதழ்) விண்ணப்பித்து அதை வெற்றிகரமாக பெறுவது ஒரு காலத்தில் பெரும்பாடாக இருந்தது. ஆனால் இன்றைய நவீன காலக்கட்டத்தில் அந்த செயல் முறையில் பல மேம்பாடுகள் வந்த பிறகு சுமார் 2 மணிநேரத்திற்குள் நாம் பாஸ்போர்ட்டுகளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றாகி விட்டது.

ஆனாலும் அந்த செயல் முறையில் இன்னமும் சில சவால்களை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மக்கள் கூட்டம், உடை அமைப்பு போன்ற அம்சங்களில் தான் நாம் இங்கு சவால்களை எதிர்கொள்கிறோம்.

ஆனால் இங்கு ஒருவர் எதிர்நோக்கிய சவால் முற்றிலும் மாறுபட்டதாகும். தேசிய பதிவிலாகாவில் பாஸ்போர்ட் விண்ணப்பதிற்காக ஆடவர் ஒருவருக்கு வழக்கத்திற்கு மாறாக பல முறை புகைப்படம் எடுக்கப்பட்டன.  இருப்பினும், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பாஸ்போர்ட் விண்ணப்பதிற்கு தகுதியற்றவை என கோரி நிராகரிக்கப்பட்டன.

இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், புகைப்படம் எடுக்கும் நேரத்தில் அந்நபரின் மொட்டை தலையில் வெளிச்சம் பட்டு ஒளியின் பிரதிபலிப்பு மிக அதிகமாக இருந்ததாம். ஆயினும் இந்த விவகாரத்தை அங்கிருந்த அதிகாரிகள் மிகவும் திறமையாக எதிர் கொண்டனர்.

அவர்கள் அந்நபரின் தலையைச் சுற்றி கருப்பு அட்டையை வைத்து வெளிச்சத்தின் பிரதிபலிப்பை கட்டுப்படுத்தினர். அதன் பின் எடுக்கப்பட்ட புகைப்படம் நேர்த்தியாக வந்துள்ளது. இச்சம்பவத்தை அப்பொழுது அங்கிருந்த ஒருவர் வீடியோ காணொளியாக பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சுமார் 14 வினாடிகள் ஓடக்கூடிய இக்காணொளியில் .  தலையை சுற்றி அட்டை வைக்கும் பொழுது அந்நபரே சிரிக்கின்றார். அதனால் வீடியோ காணொளி பதிவு செய்து கொண்டிருந்த நபர் உட்பட அனைவரும் சிரிக்க செய்கின்றனர்.

தற்பொழுது இக்காணொளி சமூக வலைத் தல பக்கங்களில் அதிகளவில் பார்க்கப்பட்டு பின் பகிரப்படுகின்றது. இணையத் தளவாசிகள் ஒரு புறம் இதை நகைச்சுவை செய்தாலும் மறு புறம் தேசிய பதிவிலாகா அதிகாரிகளின் சாமர்த்தியத்தை பாராட்டுகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker