Latestமலேசியா

பிரசன்னா டிக்‌ஷாவை கண்டுபிடிக்கும் முயற்சி: மதம் குறுக்கிடக் கூடாது! -ஐஜிபி உறுதி

கோலாலம்பூர், ஜூன்.17- இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா டிக்‌ஷாவை (வயது 11)  கண்டு பிடிக்கும் முயற்சியில் மதம்  குறுக்கிடக் கூடாது  என அரச மலேசிய காவல்படை தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் உறுதியளித்தார்.

பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா டிக்‌ஷாவை அவரின் பரமரிப்பில் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் (பத்மநாபன்) குழந்தையை வழங்க இது நாள் வரை முன் வரவில்லை.

பிரசன்னாவை கண்டுப்பிடித்து தாயரிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்ற தரப்பு காவல் துறையிடம் உத்தரவிட்ட போதிலும் இதுநாள் வரை பிரசன்னா, முகமட் ரிடுவான் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்க வில்லை.

இந்நிலையில் , இது தொடர்பில் நான் சிஐடி பிரிவினருடன் கலந்தாலோசித்து உள்ளேன். அச்சிறுமியை கண்டு பிடிக்க காவல் துறை சிறப்பு படை ஒன்றை அமைத்துள்ளது.  நான் இப்பொழுது தான் பதவியேற்றுள்ளேன். எனவே இவ்விவகாரத்தை எனது போக்கில் கையாளுவேன்.

மேலும் இவ்விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை தான் நாங்கள் பின்பற்றுவோம். இதனால் எந்த தரப்பினரும் வேதனைப்படக் கூடாது. இவ்விசாரணை நேர்மையான முறையில் தான் நடைபெறும். இதில் எவ்வித மதம் , சமயக் குறிக்கீடுகள் இருக்காது என  டத்தோஶ்ரீ  ஹமிட் படோர் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே டான்ஶ்ரீ காலிட் அபு பாக்கார், டான்ஶ்ரீ புஸி ஹருண் ஆகியோர் காவல்படை தலைவர்களாக இருந்த காலக்கட்டதிலும் அச்சிறுமியை கண்டுப் பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker