Latestமலேசியா

பூர்வக்குடிகளின் மரணங்கள்: தட்டம்மை என்கிறார் அமைச்சர்!

புத்ரா ஜெயா, ஜூன்.17- குவா மூசாங், கம்போங் கோல கோ பகுதியில் உள்ள பூர்வக்குடியின மக்களை பாதித்து “measles” எனப்படும் தட்டம்மை நோய் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் தேதி வரை அப்பகுதியில் உள்ள 33 நபர்கள் இந்நோயினால் பாதிப்படைந்துள்ளது தற்பொழுது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்டோர் மீது இதர நோய்களுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ரபேலா, தட்டம்மை, மம்ப்ஸ் போன்ற நோய்களுக்கான எம்எம்ஆர் தடுப்பு சக்தி குறைவாக உள்ளது தான் இந்நோய் பரவ முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

அப்பகுதி வாழ் மக்களில் சுமார் 61.5 விழுக்காட்டினர் முதல் கட்ட எம்எம்ஆர் நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம்  வெறும் 30 விழுக்காட்டினர் மட்டும் தான் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்.

ஜூன் மாதம் முழுவதும் இப்பகுதியில் இந்நோய் குறித்த 112 சம்பவங்கள் சுகாதார அமைச்சிடம் பதிவாகி உள்ளன என டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் குறிப்பிட்டார். இதற்கிடையே அண்மையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 15 பேர் மரணமடைந்துள்ளனர்.

நேற்று இறுதியாக 3 வயது குழந்தை ஒன்று தட்டம்மை, நிமோனியா , உடல் உறுப்புகள் கோளாறினால் மரணமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker