Latestமலேசியா

மீன்பிடிக்க சென்ற 15 வயது சிறுவன் ஆற்றில் விழுந்து மரணம்!

மஞ்சோங், ஜூன்.17- மீன் பிடிக்க சென்ற பொழுது ஆற்றில் தவறி விழந்த முகமட் டானி எனும் 15 வயது இடைநிலைப்பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மரணமுற்றான்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் அச்சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் டேசா மஞ்சோங் போயிண்ட் -II பகுதி அருகே உள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்பொழுது அவனது சிலிப்பர் (காலணி) ஆற்றில் விழுந்தது. அதனை எடுக்க முற்பட்ட போது அவன் ஆற்றில் தவறி விழுந்தான்.

உடன் இருந்த நண்பர்கள் முயற்சித்த போதிலும் அவனை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு பிற்பகல் 2.35 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த அவர்கள்  பங்கோர் தீவு பகுதி மீட்பு குழு, இதர இலாகாக்களின் உதவியோடு அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 6 மணி நேர தேடுதலுக்கு பிறகு இரவு 8.45 மணியளவில் முகமட் டானி விழுந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தூரத்தில் உள்ள கற்களிடையே சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட அச்சிறுவனின் உடல் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என ஶ்ரீ மஞ்சோங் தீயணைப்பு  மீட்பு படையின் தலைமை அதிகாரி அப்துல் ஹஸார் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker