Latestமலேசியா

வரியைச் செலுத்தாத அரசியல்வாதிகளின் நண்பர்கள்! – -சுல்தான் சாடல்

கங்கார், ஜூன் 17 – அரசியல்வாதிகளின் உதவியோடு மாநில வரியைச் செலுத்தாத நபர்களைப் பெர்லிஸ் சுல்தான் துவாங்கு சைட் சிராஜுடின் புத்ரா ஜமலுல்லாய் கடுமையாகச் சாடினார்.

மாநில ஆட்சிக் குழுவினரின் மறு நியமனச் சடங்கில் உரையாற்றிய சுல்தான், வரியைச் செலுத்தத் தவறுவோர், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் உதவியை நாடி, வரியை இன்னும் ஐந்தாறு மாதத்தில் செலுத்தும் கால வரம்பை நீட்டிப்பதாகத் தெரிவித்தார்.

அவர்கள் அதே போன்று பல முறை செய்வதால் மாநில அரசு போதுமான வரியை வசூலிக்க முடியாமல்  மேம்பாட்டுப் பணிகளுக்குப் போதுமான பணம் கிடைப்பது இல்லை என அவர் குறிப்பிட்டார்.

மாநிலம் 12.89 கோடி ரிங்கிட்டை வரியாக வசூலித்திருந்தாலும் வசூலிக்கப்படாத வரி அதற்கும் அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே,  சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் யார் என்பதை மந்திரி பெசார் அஸ்லான் மானும் சுல்தானும் வெளியிட வேண்டுமென முன்னாள் மந்திரி பெசார் ஷாஹிடான் காசிம் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker