Latestஇந்தியா

1எம்டிபி விவகாரம் – இரு அதிகாரிகள் அபு தாபி சிறையில்!

தூபாய், ஜூன் 17 – 1எம்டிபி நிதி முறைகேடலில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்ட  இரு அதிகாரிகள்,  அபு தாபி சிறையில் தண்டனை அனுபவிப்பதாக வால் ஸ்டிரீட் ஜெர்னல் குறிப்பிட்டுள்ளது.

அபு தாபி இண்டர்நேஷனல் பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்தின் (ஐபிஐசி) முன்னாள் தலைவர் காடெம் அல் குபாய்சிக்கு 15 ஆண்டும்  ஐபிஐசியின் துணை நிறுவனத்தை வழிநடத்திய முகமட் படாவி அல் ஹுசேய்னிக்கு 10 ஆண்டும் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் இருவரும் இழப்பீடாக மொத்தம் 33.6 கோடி டாலரை நீதிமன்றத்துக் செலுத்த வேண்டும். அவர்களிருவரும் 1எம்டிபி நிதி முறைகேடலில்  சம்பந்தப்பட்டுள்ளதாக அதிகாரத்துவமில்லாத நபர் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட் இருவரும் 1எம்டிபியின் நிதி முறைகேடலில் சம்பந்தப்பட்டு சுய லாபம் அடைந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker