Latestஉலகம்

அமெரிக்க தடை: ஹுவாவெய் தொலைபேசிக்கு 10,000 கோடி டாலர் இழப்பா?

ஹாங்காங், ஜூன். 18-  சீனாவின் பிரசித்தி பெற்ற ஹுவாவெய்
தொலைபேசி நிறுவன  சாதனங்களுக்கு அமெரிக்கா விதித்த
தடையினால் இவ்வாண்டிலும் அடுத்த ஆண்டிலும் குறைந்தது
10,000 கோடி டாலர் வரை  ஹுவாவெய் நிறுவனத்துக்கு வருமான
இழப்பு ஏற்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக
அதிகாரி ரென் ஷங் ஃபெய் தெரிவித்துள்ளார்.

இந்த வருமான இழப்பு என்பது  தாங்கள் எதிர்பார்த்ததை விட
மிக மிக அதிகம் என்று அவர் வர்ணித்தார்.   ஹுவாவெய்
நிறுவனம் சுய காலில் நிற்கும் ஆற்றல் பெற்றது என்றெல்லாம்
அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் அண்மைய வாரங்களாக
அறிவித்து வந்த போதிலும் முதன்முறையாக மோசமான
இழப்பை அது சந்திக்க நேரும் என்று பகிரங்கமாக
ஒப்புக்கொண்டுள்ளார் ரென் ஷங் ஃபெய்.

ஹுவாவெய் நிறுவனத்தை முறியடிக்க அமெரிக்கா
மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, இவ்வளவு கடுமையாக
அமையும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.
உபரிப் பொருட்கள் எதனையும் விற்க முடியவில்லை.
அனைத்துலக வர்த்தக கருத்தரங்குகளில் பங்கேற்க
முடியவில்லை.  பல்கலைக் கழகங்களுடன் தொழில்நுட்ப உறவை
பேண முடியவில்லை.  அமெரிக்காவின் எந்தவொரு உபரி
பாகங்களையும் நாங்கள் பயன்படுத்த முடியவில்லை என்று
இங்கு நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் அவர்
தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker