Latestமலேசியா

ஆபாச வீடியோ தயாரிப்பு: பிலிப்பினோக்கள் உதவியா?- அஸ்மின் சந்தேகம்

ஷா ஆலம், ஜூன் 18 – தம்மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட ஆபாச பாலியல் வீடியோக்கள் பிலிப்பைன்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டிருக்கும் சந்தேகம் எழுவதாக அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

அதில் சம்பந்தப்பட்டுள்ள ஹாஸிக் அஸிஸ் மணிலாவுக்குச் செல்லவிருந்த போது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்காவது நாளில் மேற்கண்ட விவரத்தை அஸ்மின் சுட்டிக்காட்டினார்.

அந்த வீடியோ பதிவினை யார் தயாரித்தது கட்சியின் அனைத்து அதிகாரிகளுக்கும் பரப்பியது யார் என்பது இப்போது  புலனாகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

இருவர் சம்பந்தப்பட்ட பாலியல் ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, ஒரு மாநிலத்தின் பிகேஆர் தலைவர் ஒரு வாரமாக காணாமல் போய் இருப்பதாகத் தெரியவருகிறது.

மூலத்தொழில் அமைச்சின் துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டாரின் உதவியாளரான ஹாஸிக் அஸிஸ், வீடியோ பதிவில் தம்மோடு அஸ்மின் இருப்பதாகக் கூறி வருகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker