Latestமலேசியா

உடல் உறுப்புக்காக குழந்தைகள் கடத்தலா? துணை ஐஜிபி மறுப்பு!

கோலாலம்பூர், ஜூன்.18- உடல் உறுப்புகளை எடுப்பதற்காக குழந்தைகளை கடத்தும் கும்பல் ஒன்று செயல்படுவதாக கூறப்படுவது உண்மை அல்ல. அவை வெறும் வதந்திகள் என்று மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ மஸ்லாம் மன்சோர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே போலீசார் பல்வேறு மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டு உள்ள போதிலும் தொடர்ந்து இந்த வதந்தி பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உறுப்புக்களை அகற்றுவது என்பது தனி மனிதர்களால் செய்ய முடிந்த காரியம் அல்ல. அது மருத்துவத்துறை சார்ந்த நிபுணர்களால் மட்டுமே செய்ய முடிந்த காரியம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற டத்தோ மன்சூர் வலியுறுத்தினார்.

உடல் உறுப்புகளை எடுப்பதற்கு பல்வேறு மருத்துவ ரீதியான கடும் நடைமுறைகள் அமலில் உள்ளன. இது போன்ற விஷயங்களில் தவறான வதந்திகளை பொதுமக்கள் பரப்பக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் தொடர்ந்து வதந்திகளை பரப்புவோர் மீது பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker