Latestமலேசியா

என்கேவிஇ நெடுஞ்சாலையில் 14 வாகனங்கள் விபத்து! 10 பேர் காயம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18 – புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையில் (என்கேவிஇ) நேர்ந்த 14 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

இன்று காலை 12.25 மணியளவில் ஏற்பட்ட அந்த விபத்தில்  5 பிள்ளைக்கள் உட்பட 10 பேர் காயமடைந்ததாக  பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி முகமட் ஸானி சே டின் தெரிவித்தார்.

காய்கறி ஏற்றிச் சென்ற லோரி கட்டுப்பாட்டை இழந்து, போலீஸின் இரு வாகனங்கள் உட்பட  பல வாகனங்களை மோதியதாகத் தெரிகிறது. காயமடைந்தோர் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலர் வெளி  நோயாளிக்கான சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.

36 வயதான லோரி ஓட்டுநர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இது கவனஈனமாக  வாகனத்தை ஓட்டிய குற்றமாகக் கருதி 1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டம் பிரிவு 43(1) இன் கீழ் விசாரணை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker