Latestமலேசியா

எஸ்ஆர்சி விசாரணை: நீதிமன்றத்தில் ரோஸ்மாவா?: அரசு தரப்பு ஆட்சேபம்!

கோலாலம்பூர், ஜூன் 18 – நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சி வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, ரோஸ்மா மன்சோரின் வருகையை அரசு வழக்கறிஞர் வன்மையாகக் கடிந்துரைத்தார்.

இன்று காலை 9.20 மணியளவில்  எஸ்ஆர்சியின் விசாரணையில் அதன் வாரியத் தலைவர் இஸ்மீ சாட்சியமளித்துக் கொண்டிருந்தபோது, ரோஸ்மா நீதிமன்றத்தில் நுழைந்து நஜிப்பின் பின்னால் இருக்கையில் அமர்ந்தார். அதனைக் கண்ட அரசின் வழக்கறிஞர் வி.சிதம்பரம், அதனைச் சுட்டிக்காட்டி தமது எதிர்ப்பினைத் தெரிவித்தார்.

நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலியிடம் அதனைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த வழக்கில் ரோஸ்மாவிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தியிருப்பதால், அவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் சாட்சியாக இருக்கிறார். எனவே, அவர் நீதிமன்ற  விசாரணையை செவிமடுக்கக் கூடாது என தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அவர் விசாரணையை செவிமடுப்பது விதிமுறைக்கு முரணான செயல் என அவர் குறிப்பிட்டார். எனினும், வழக்கறிஞர் கே,குமரேந்திரன், ரோஸ்மா இதற்கு முன்னரே நீதிமன்றத்தில் இருந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker