Latestமலேசியா

ஓட்டப்பந்தய சம்மேளன தேர்தல்: கரிமுக்கு எதிராக களமிறங்கினார் எஸ்.எம். முத்து

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.18- மலேசிய ஓட்டப்பந்தைய சம்மேளனத்தின் (கே.ஓ.எம்) 16ஆவது தேர்தலில் அதன் நடப்பு  துணைத் தலைவரான டத்தோ எஸ்.எம்.முத்து  தலைவர் பதவிக்கு போட்டி போடுகின்றார். இம்முறை அவர் சம்மேளனத்தின் நடப்பு தலைவரான டத்தோ கரிம் இப்ராஹிமை எதிர்த்து களம் இறங்கின்றார்.

எதிர்வரும் ஜூன் 30ஆம் தேதியன்று விஸ்மா ஓ.சி.எம்.மில் நடைபெறவிருக்கும் இந்த தேர்தலை முன்னிட்டு சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள 10 சங்கங்கள் தங்களது வேட்பாளர்களை முன்மொழிந்துள்ளனர். தலைவர் பதவி உட்பட அனைத்து பதவிகளுக்கும் முன் மொழியப்பட்டவர்கள் அனைவரும் புது முகங்கள் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு டத்தோ எஸ்.எம்.முத்து – டத்தோ கரிம் இப்ராஹிம் இடையே நேரடிப் போட்டி நிலவும் வேளையில் துணைத்தலைவர் பதவிக்கு டத்தோ மும்தாஸ் ஜபாரும் டத்தோ ஷஹிடான் காசிமும் போட்டியிடுகின்றனர்.

நான்கு உதவித் தலைவர் பதவிக்காக எம்.ஐயாரு, ரஜிமா ஷேய்க் அகமட், முகமட் அவாங், வி.மதிவானன், வில்லியம் லிங், டத்தோ ஆர். அண்ணாமலை, பாட்ஷீல் அபு பாக்கார், ஜோசப்பின் கான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எஸ்.எம். முத்து,  இச்சம்மேளனம் தவிர்த்து பெட்டாலிங் ஜெயா கால்பந்து சங்கம் , சிலாங்கூர் ஓட்டப் பந்தய சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றார்.

டத்தோ கரிம் இப்ராஹிம்  மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனத்தின் தலைவராக 2 தவணைகள் பதவி வகித்து வருகின்றார். அவர்  துணைத் தலைவர், செயலாளர் உட்பட கடந்த 25 ஆண்டு காலமாக  அந்த அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker