Latestமலேசியா

கஞ்சா போதையில் காரோட்டி- நாசி லெமாக் கடைக்காரரை மோதிக் கொன்ற நபர் கைது!

கப்பளா பத்தாஸ், ஜூன். 18- கஞ்சா போதையில் கார் ஓட்டி சென்று, நாசி லெமாக் கடை மீது மோதியதில் அந்த கடையின் உரிமையாளரான 44 வயதுடைய பெண்மணி ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

அதே வேளையில் அந்தப் பெண்மணியின் கணவர் மிகக் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம்கப்பளா பத்தாஸ் ஜாலான் பெர்த்தாம் இண்டா என்ற இடத்தில் நேற்று பிற்பகலில் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 31 வயது உடைய உலோகத் தொழில் ஊழியர் ஒருவரை கைது செய்திருப்பதாக செப்பராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் நூர்ஷைனி முகமட் தெரிவித்தார்.

இந்த நபர் போதை மயக்கத்தில் கார் ஓட்டியதாக கண்டறியப் பட்டிருக்கிறது. குறிப்பாக, இவர் கஞ்சா அருந்தியிருந்தது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருந்து தெரியவந்ததாக அவர் சொன்னார்.

இந்த நபரிடம் முறையான வாகனம் ஓட்டும் உரிமை இல்லை. அதே வேளையில் அவரது வாகனத்திற்கு சாலை வரிபட்டையும் இல்லை. போதை மயக்கத்தில் கார் ஓட்டியதற்காக 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 44(1) என்ற பிரிவின் கீழ் தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது மேலும் அவர் இந்த விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

காயமடைந்த நாசி லெமாக் கடை உரிமையாளர் ரோஸ்லின்டா முகமட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது உயிர்நீத்தார். அவருடைய கணவரான 44 வயதுடைய மாட் சப்ரி தலையில் மிகக் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker