Latestமலேசியா

கவுன்சலிங் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்!

கோல லங்காட், ஜூன்.18- இடைநிலைப் பள்ளி மாணவன் ஒருவன் (வயது 17) அப்பள்ளியின் கவுன்சலிங் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியிலிருந்து தன்னை நீக்கம் செய்ய அந்த ஆசிரியர் முற்பட்டதை அடுத்து அவன் இச்செயலை புரிந்ததாக நம்பப்படுகின்றது.

இவ்வருடம் எஸ்பிஎம் தேர்வு எழுதவுள்ள அம்மாணவன் நேற்று மாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த 30தின்ம வயதுடைய ஆண் ஆசிரியரின் தோள் பகுதியில் மூன்று முறை கத்தியால் குத்தியுள்ளான்.

பிறகு தனது சக நண்பர்கள் உதவியோடு அக்கத்தியை மண்ணில் புதைத்துள்ளான் என சிலாங்கூர் மாநில காவல்படையின் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் துணை ஆணையர் ஃபட்ஸில் அகமட் தெரிவித்தார்.

இச்சம்பவம் நடந்ததை அடுத்து அம்மாணவன் கைது செய்யபட்டுள்ளான். நாளை காலை அவனை தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். குத்துப்பட்ட அந்த ஆசிரியர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆசிரியரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker