Latestசினிமா

கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் ஶ்ரீரெட்டியின் கலாய்ப்பு!

சென்னை, ஜூன். 18- தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும்
கீர்த்தி சுரேஷை விமர்சனம் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய  நடிகை ஸ்ரீரெட்டி
வம்புக்கு இழுத்துள்ளார்.

நடிகை சுரேஷ் பற்றியும் அவரது  உடல் எடையை பற்றியும் ஸ்ரீ ரெட்டியின் கலாய்ப்பு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று சகட்டுமேனிக்கு பலரது  பாலியல் விவகாரங்கள் குறித்து அம்பலப்படுத்தி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு பட உலகை மட்டுமின்றி தமிழ்ப் பட உலகிலும் இத்தகைய சர்ச்சைகளைக்
கிளப்பியவர் இவர்.  தற்போதைய ஸ்ரீ ரெட்டி தனது சமூக ஊடக பதிவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே  விமானத்தில் பயணம் செய்தோம்.   நான் உட்பட
யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.  என்னுடன் பலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

உடல்  எடையை குறைத்ததற்கு பின்னர் கீர்த்தி சுரேஷ் ஒரு நோயாளியை போல் ஆகிவிட்டார்.  கீர்த்தி சுரேஷின் படங்கள் அவரது இயக்குனர்கள் திறமையால் புகழ்பெற்றனவே தவிர, கீர்த்தி சுரேஷுக்கு திறமை இல்லை.  தற்போது சாய் பல்லவி தான் மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார் என்று ஶ்ரீ ரெட்டி விமர்சனம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker