Latestமலேசியா

கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி மதிப்பீட்டில் சிறப்பு விருது பெற்ற மலேசிய மாணவன் !

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.18- மலேசியாவைச் சேர்ந்த அண்ட்ரூவ் இங் ஜிங் (வயது 17) என்ற மாணவர் கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி மதிப்பீட்டில் சிறப்பு விருது பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா, பிகன்ஹவுஸ் ஶ்ரீ இனாய் சர்வதேச பள்ளி மாணவரான இவர் கணிதம் , கூடுதல் கணிதம் ஆகிய பாடங்களுக்கான சர்வதேச இடைநிலைக் கல்வி பொது சான்றிதழ் தேர்வில் (ஐஜிஎஸ்சிஈ) உலகளவில் அதிக மதிபெண்களை பெற்று கேம்பிரிட்ஜ் சிறந்த கற்றல் விருதினை வென்றுள்ளார். இவர்  கடந்த வருடம் நவம்பர் மாதம் இத்தேர்வை எழுதியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு இச்சாதனை குறித்து விவரித்தார். அதில், உலக அளவில் இந்த அங்கீகரம் கிடைத்தது எனக்கு மன மகிழ்ச்சியை அளிக்கின்றது. மிகவும் கடினமான பிரச்னைகளை சரி செய்ய சவால் விடுப்பதால் எனக்கு கணிதப் பாடம் மிகவும் பிடிக்கின்றது.

இந்த சாதனையை அடைய நான் எதிர்கொண்ட சவால்கள் மிகவும் கடினமானவை. ஆரம்ப காலக்கட்டத்தில் கவனக்குறைவினால் பல முறை பள்ளி வீட்டுப்பாடங்களை  செய்ய தவறியுள்ளேன். ஆனாலும் கடின உழைப்பு, பொறுமை, கவனம், ஆகிய அம்சங்கள் தான் இவ்வெற்றியை எனக்கு பெற்று தந்துள்ளன.  எனக்கு பேருதவியாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் என அவர் குறிப்பிட்டார்.

அவரின் பள்ளி நிர்வாக தலைமையாசிரியர் நிக்கி கூம் கூறுகையில், அண்ட்ரூவ்வின் சாதனை அளப்பரியது. கடின உழைப்பு தான் அவரின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார். அண்ட்ரூவ் தற்பொழுது தென் ஆஸ்திரெலியாவின் மெட்ரிகுலேஷன் கல்வி பயின்று வருகின்றார். மருந்தாளராக விரும்பும் அவர், உயிர் காக்கும் மருந்துகளை கண்டுப்பிடிக்கவும் எண்ணம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker