Latestமலேசியா

சங்கிலி கட்டோடு நீரில் இறங்கிய மாயாஜால நிபுணர்: திரும்பி வராததால் அதிர்ச்சி!

கொல்கத்தா, ஜூன். 18- தன்னுடைய கை, கால்களை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு, கங்கை நதியில் இறக்கிவிடப்பட்ட இந்தியாவின் பிரபல மாயாஜால நிபுணர் மீண்டும் மேலே உயிருடன் திரும்பவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் வழக்கம்போல சங்கிலி கட்டுக்களில் இருந்து விடுபட்டு நீருக்கு மேலே வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்று அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் காத்திருந்தனர்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் மேலே வராததால் குடும்பத்தினர் கதறி அழுதனர். உடனடியாக அவரது உதவியாளர்களும் மீட்புப் பணியாளர்களும் அவரைத் தேடத் தொடங்கினார்.

40 வயதுடைய சஞ்சால் லஹிரி என்று அழைக்கப்படும் இந்த மாயாஜால நிபுணர் மிகவும் பிரபலமான ஒருவராவார். கொல்கத்தாவில் ஆற்றினுள் பாரம் தூக்கி எந்திரம் மூலம் இறக்கி விடப்பட்டார். மீண்டும் அவை ஈடு வராத நிலையில் தேடும்பணி நீடிக்கிறது.

இன்னும் அவருடைய உடல் கண்டுபிடிக்கப்படவில்லை இதுபோன்ற சாகசங்களை சஞ்சால் லஹிரி அடிக்கடி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker