Latestஉலகம்

சிகிச்சை பெறும் குழந்தை ஐனுல்; மகாதீர் சென்று கண்டார்

லண்டன், ஜூன் 18 – லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் வாயில் இருந்த அரியவகை புற்றுநோய் கட்டியை அகற்றிய பின்னர், சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தை ஐனுலை துன் மகாதீர் சென்று கண்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

நேற்று, 17ஆம் தேதி, மகாதீர் வருகை தந்தது குழந்தையின் தந்தை அகமட் சஃபியுடின் அகமட் ரசாக் மற்றும் தாயார் நூருல் எர்வானி (24) ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  இங்கிலாந்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு சென்றிருந்த மகாதீர் தம்பதியர்,  நாடு திரும்புவதற்கு முன்னர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை ஐனுலைச் கண்டனர்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், குழந்தை சுயமாக சுவாசிப்பதோடு தேறி வருவதாகச் சொல்லப்பட்டது. குழந்தையின் நிலை கண்டு தாம் வருத்தமடைந்ததாகவும், மலேசிய மக்கள் அக்குழந்தையின் சிகிச்சைக்கு உதவியது கண்டு தாம் பெரிதும் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார்.

பிறப்பிலிருந்தே அந்தக் குழந்தை புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட பின்னர்,  லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அறுவைச் சிகிச்சைக்கான  1 மில்லியன் ரிங்கிட் செலவை மலேசியாவில் உள்ள நல்லுள்ளங்கள் ஏற்றுக் கொண்ட  வேளையில், அந்த அறுவைச் சிகிச்சைக்கு மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் நூர் அமலினா சே பக்ரி ஏற்பாடு செய்திருந்தார்.

தமது மகளைக் காண வந்திருந்த மகாதீருக்கு ஐனுலின் தந்தை அகமட் சஃபியுடின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker