Latestமலேசியா

சீனாவுக்கு உறைநிலையில் முழு டுரியான் பழ ஏற்றுமதியில் மலேசியா!

புத்ராஜெயா, ஜூன். 18- உறைய வைக்கப்பட்ட முழு டுரியான் பழத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் மலேசியா இனி ஒவ்வொரு மாதமும் ஆயிரம் மெட்ரிக் டன் இலக்கை எட்டி விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு டுரியான் பழச் சுளைகளையும் அதன் விதை நீக்கப்பட்ட பழச் சாந்தையும் சீனாவுக்கு மலேசியா ஏற்றுமதி செய்து வந்தது.

இப்போது உறைய வைக்கப்பட்ட முழு டுரியானையும் ஏற்றுமதி செய்யும் திட்டத்தை மலேசியா முதன்முறையாக தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவுக்கு 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டுரியான்களை மலேசியா ஏற்றுமதி செய்தது.

இந்நிலையில் முழு டுரியானையும் உறைநிலையில் ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்து இருப்பதால் இவ்வாண்டு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 500 மில்லியன் ரிங்கிட் வரை கூடுதலான வருமானத்தை மலேசியா எதிர்பார்க்கிறது.

ஐந்து நிறுவனங்களுக்கு இந்த ஏற்றுமதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் முழு டுரியான்களின் ஏற்றுமதியை இந்த ஐந்து நிறுவனங்களும் தொடங்கிவிடும் என்று விவசாயத் துறை மற்றும் விவசாய தொழில் சார்ந்த துறை அமைச்சர் சலாஹுடின் அயோப் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker