Latestமலேசியா

துணைப் பிரதமர் பதவியை கணவருக்காக விட்டு கொடுக்கிறேனா? வான் அஸீசா மறுப்பு

கோலாலம்பூர், ஜூன்.18- தமது கணவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழிவிடும் வகையில் தாம் துணைப் பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளி வந்த தகவலை டத்தோஶ்ரீ வான் அஜிஸா மறுத்துள்ளார்.

டத்தோஶ்ரீ அன்வார் பிரதமர் பதவியை ஏற்பது உறுதி. ஆனால் அதற்கான நேரத்தை இப்பொழுது கூற இயலாது. டத்தோஶ்ரீ அன்வார் பிரதமர் பதவி ஏற்கும் செயல்பாட்டினை முன் நகர்த்தும் வகையில் நான் எனது துணைப்பிரதமர் பதவியை அவருக்கு விட்டு கொடுக்கவுள்ளேன் என்ற தகவல் முற்றிலும் பொய்.

துன் மகாதீர் தான் நாட்டின் தற்போதைய பிரதமர் , நான் தான் துணைப் பிரதமர். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டத்தோஶ்ரீ அன்வார் பிரதமர் பதவியை ஏற்பதற்கு இலகுவாக முதலில் அவருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க வேண்டும் என ஜெராம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாய்ட் ரொஸ்லி கருத்துரைத்திருந்தார்.

மேலும் பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீர் இறங்க வேண்டும் என அன்வாருக்கு பெரும் ஆதரவு வழங்கி வரும்  “ஓதாய் ரீபோர்மிஸ்” (Otai Reformis) அமைப்பு வலுயுறுத்தியது.

தற்பொழுது பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய வீடியோ காணொளி விவகாரம் கூட அன்வார் பிரதமர் பதவியை ஏற்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றென சில தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker