Latestஉலகம்

நடிகர் சங்கத் தேர்தல்:- இடத்தை மாற்ற நீதிமன்றம் உத்தரவு

Agnisugu Sugumar (agnisugu@gmail.com)சென்னை, ஜூன். 18-நடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும்- நடிகர் பாக்கிய ராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:- நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு அருகில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன. தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

எனவே தேர்தலுக்கான வாக்குப் பதிவின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தினால் மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால் காவல்துறை பாதுகாப்பு அனுமதி அளிக்கவில்லை. ஈசிஆர்,ஓஎம்ஆர் போன்ற நகரத்துக்கு வெளியே தேர்தலை நடத்தலாம் என

காவல் துறை சார்பாக நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது இதையடுத்து நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலையில்லை பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பே முக்கியம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடத்தை நாளை தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker