Latestமலேசியா

பினாங்கில் குடிநுழைவுச் சோதனை: 87 அன்னிய தொழிலாளர்கள் கைது!

ஜார்ஜ்டவுன், ஜூன்.18- குடிநுழைவு விதிமுறைகளை மீறியதற்காக தஞ்சோங் தொக்கோங் பகுதியில் 87 அன்னிய தொழிலாளர்களை குடிநுழைவு துறை கைது செய்திருக்கிறது.

ஜாலான் ஶ்ரீதஞ்சோங் பினாங்கு பகுதியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு 101 அன்னிய தொழிலாளர்களை கைது செய்தனர்.

இவர்கள் பெரும்பாலும் இங்கு கட்டப் பட்டுவரும் இரண்டு அடுக்கு மாடி வீடுகளின் கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 15 பேர் இந்திய பிரஜைகள், 46 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள், மேலும் 22 பேர் மியான்மார் பிரஜைகள் என்று குடிநுழைவு துறை அறிக்கை கூறியது.

முறையான ஆவணங்கள் இன்றி நாட்டுக்குள் நுழைந்தது, காலாவதியான வேலை அனுமதி வைத்திருந்தது மற்றும் பல்வேறு விதிமுறைகளை மீறி வேலை செய்து வந்தது ஆகியவற்றின்அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பில் குடிநுழைவுத் துறைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட கட்டுமானத் துறை முதலாளிகள் குடிநுழைவு துறைக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker