Latestமலேசியா

பிரிமியர் டிஜிட்டல் தொழில் நுட்ப அங்கீகாரம்; பட்டியலில் 3 உயர்க் கல்வி கூடங்கள் சேர்ப்பு!

சைபர் ஜெயா, ஜூன்.18- பிரிமியர் டிஜிட்டல் தொழில் நுட்ப அங்கீகாரத்தை கொண்டுள்ள உயர்க்கல்வி கூடங்களின் பட்டியலில் புதிதாக ஹெல்ப் பல்கலைக்கழகம், அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகம், துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் ஆகிய மூன்றும்  இணைந்துள்ளன. இத்தகவலை கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் அறிவித்தார்.

இதன் வழி நாட்டில் இந்த பிரிமியர் டிஜிட்டல் தொழில் நுட்ப அங்கீகாரத்தை கொண்டுள்ள உயர்க்கல்வி கூடங்களின் எண்ணிக்கை தற்பொழுது 16ஆக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தை மலேசிய உயர்க் கல்வி அமைச்சு – மலேசிய டிஜிட்டல் பொருளாதார கழகம் ஆகியவை இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தின.

இந்த திட்டத்தின் வழி டிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது விவசாயம், உற்பத்தி உட்பட இதர தொழில் துறைகளிலும் திறமையான நிபுணர்கள், தலைவர்களை உருவாக்க முடியும். மேலும், இதன் வழி மலேசியர்கள் டிஜிட்டல் சந்தை, தரவு பகுப்பாய்வு, ரோபோட்டிக் போன்ற துறைகளிலும் ஈடுபடத் தயார்ப்படுத்தப் படுகின்றனர்.

அதன் அடிப்படையில் கடந்த வருடம் இத்திட்டத்தின் கீழ் 8 பல்கலைக்கழங்களும் ஐந்து தொழிற்கல்வி கூடங்களும் (பாலி-டெக்னிக்) அங்கீகரிக்கப் பட்டன. இந்த பிரிமியர் டிஜிட்டல் தொழில்நுட்ப  அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் உயர்க்கல்வி கூடங்கள் தொழில்துறைக்கு பொருத்தமானவை என்பதை உறுதிப் படுத்துவதற்காக பலவிதமான துல்லியமான மதிப்பீட்டு செயல்முறைகளுக்கு உட்படுத்தப் படுகின்றன என அமைச்சர் தமதறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடயே பிரிமியர் டிஜிட்டல் தொழில் நுட்ப அங்கீகாரத்தை கொண்டுள்ள உயர்க்கல்வி கூடங்களில் கல்வி முடித்த மாணவர்களில் 95 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளன. மேலும் இதர கல்வி கூடங்களின் மாணவர்களை காட்டிலும் அவர்கள் 1.5 மடங்கு அதிகமாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என மலேசிய டிஜிட்டல் பொருளாதார கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சுரினா சுக்ரி கருத்துரைத்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker