Latestமலேசியா

மரம் ஏற “மோட்டார்” இயந்திரம் ; இந்திய விவசாயி கண்டு பிடிப்பு !

கோலாலம்பூர், ஜூன்.18- மரம் ஏறுவதற்கு குறிப்பாக தென்னை- பாக்கு மரங்கள் ஏறுவதற்கு தனித் திறமையும் அனுபவம் தேவை. உலகளவில் உள்ள விவசாயிகள் இந்த வகை மரங்களை ஏறுவற்கு பல யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில் உள்ள விவசாயிகள் பலர் இந்த மரங்கள் ஏறி பழம் பறிக்க குரங்குகளின் உதவியை நாடி வருகின்றனர்.

ஆனால் இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் இதற்கு தொழில்நுட்ப ரிதியில் வழி கண்டுள்ளார். கணபதி பாட் (வயது 49) எனும் அந்நபர் மரம் ஏறுவதற்கு “மோட்டார்” இயந்திரத்தை கண்டுப் பிடித்துள்ளார். அண்மையில் இது குறித்த காணொளி சமூக வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 26 வினாடிகள் ஓடக்கூடிய அக்காணொளியில், கணபதி  பாட்,  அந்த “மோட்டார்” இயந்திரத்தை பயன்படுத்தி பாக்கு மரம் ஏறச் செய்கின்றார். அந்த இயந்திரத்தில் இருக்கை, கிளச், பிரேக், இஞ்சின் (2.1 வேக அளவு)  என மோட்டார் சைக்கிளில் உள்ள அம்சங்கள் உள்ளன.

அந்த இயந்திரம் மரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.  கணபதி இருக்கையில் அமர்ந்து விசையை திருகியதும் அந்த இயந்திரம் மரத்தின் மேலே செல்கிறது. இந்த காணொளிக்கு சமுக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் பலரும் கணபதியின் கண்டு பிடிப்பை பாராட்டி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த இயந்திரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் நான் சுமார் 10 வருடங்களாக ஈடுபட்டு வருகின்றேன். பல முறை தோல்வியடைந்தாலும் நீண்ட ஆய்விற்கு பிறகு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீண்டும் நான் இம்முயற்சியில் இறங்கினேன்.

அதற்கு பலனாக தற்பொழுது இயந்திரம் முழுமைப் பெற்று விட்டது. நான் முன்னதாக அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்று தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றியுள்ளேன். அதனால் தான் இது போன்ற யோசனைகள் எனக்கு தோன்றுகின்றது.

இந்த இயந்திரத்தை முதல் முறை சோதனை செய்யும் பொழுது கூட நான் என் மகனிடம், ஆம்புலன்ஸ் சேவையை தயார் நிலையில் இருக்கச் சொன்னேன். ஆனால் முயற்சி நல்ல படியாக முடிவுற்றது. இந்த இயந்திரத்தின் பயன்பாட்டை இதர விவசாயிகளுக்கு முன் காட்டும் முன்னர் சுமார் 150 மரங்கள் ஏறி,  இறங்கி இருப்பேன் என கணபதி தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker