Latestஉலகம்

600 பேர் ஒருசேர முக்குளித்து கடலை சுத்தம் செய்து கின்னஸ் சாதனை!

ஃபுளோரிடா,ஜூன்.18- அண்மையில் 600க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து கடலில் முக்குளித்து அங்குள்ள குப்பைகளை சுத்தம் செய்துள்ளனர். இந்நிகழ்வு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வு ஃபுளோரிடாவில் உள்ள “இர்பீல்” எனுமிடத்தில் உள்ள கடற்கரையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 633 நபர்கள் கலந்து கொண்டு கடலில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். அவர்கள் அனைவரும் குழுவாரியாக பிரிந்து சுமார் 15 நிமிடங்கள் கடலில் முக்குளித்து குப்பைகளை சுத்தம் செய்தனர்.

கின்னஸ் சாதனை குழுமத்தை சேர்ந்த அதிகரி மைக்கல் எப்ரிக் இந்நிகழ்வை பார்வையிட்டார். மேலும் கடலை சுத்தம் செய்ய இவ்வளவு நபர்கள் ஒன்றிணைந்தது பாராட்டுதலுக்குரியது என அவர் கூறியதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே இலிநோய்ஸ் எனும் இடத்தைச் சேர்ந்த டலிய போலின் எனும் 13 வயது சிறுமி பல மைல் தூரம் பயணித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்றும் அச்செய்தியில் தகவல் உள்ளது.

இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத் தலங்களில் தற்பொழுது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. மக்கள் இம்முயற்சியை பாராட்டுவதோடு கடலில் குப்பைகளை வீசும் தரப்பினருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker