Latestஇந்தியா

அம்பானியை நெருக்கும் சீன வங்கிகள்

புதுடில்லி ,ஜூன்.19 -அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள நிலையில் சீனாவிலிருந்தும் நெருக்கடிகள் முற்றுகின்றன.

சீனா டெவலப்மெண்ட் பேங்க் , இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பேங்க் ஆப் சீனா, எக்ஸிம்பேங்க் ஆப் சீனா ஆகிய வங்கிகள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தங்களுக்கு குறைந்தபட்சம் 14,600 கோடி ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

திவால் நடவடிக்கைக்கு தயாராகி உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சொத்துக்களை விற்று கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. திங்களன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் 57 ,382 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker