Latestஉலகம்

இணையத்துக்காக குடும்பத்தைக் கொலை செய்யத் துணிவதா?

பேங்காக்,  ஜூன்.19 – தாய்லாந்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், கைத்தொலைப்பேசியில் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதனைத்  தடுக்க முயற்சித்த குடும்பத்தினரைப் பழி தீர்க்க நீரில் விஷத்தைக் கலந்த  சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று, சாக் துவான்ஜன் (வயது 29) என்ற  ஆடவர் வீட்டிற்கு வரும் போதே குடிபோதையில் வந்துள்ளார்.  அதன் பிறகு, கைப்பேசியில் வீடியோ  விளையாட்டை  சத்தமாக ஒலிக்க  வைத்து விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது.

தூங்கும் நேரத்தில் இவ்வளவு சத்தமாக இருக்கிறதே என்று எண்ணி அந்த ஆடவரின் வளர்ப்புத் தந்தை சக்ரி கம்ருவாங் (வயது  52) என்பவர் வீட்டில் உள்ள வைஃபய் எனப்படும் இணையத் தொடர்பைத் துண்டித்துள்ளார்.

அவரின் அந்த செயலால் கோபமடைந்த அந்த ஆடவர், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி உள்ளார். மறுநாள்,  அவரின் தாயார் சமையலுக்கு தண்ணீர் கொண்டு வர கிணற்றிற்குச் சென்றபோது, நச்சு மருந்து நீரின் மேல் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக, விசாரித்த போது காலை 2 மணியளவில்,  சாக் துவான்ஜன் கிணற்றில் எதையோ கொட்டியதை  நான் பார்த்தேன். என்னவென்று கேட்ட போது,  அவன் பதில் ஏதும் சொல்லாமல் அறைக்குச் சென்றதாக அவரின் தாயார் குறிப்பிட்டார்.

அவன் இவ்வாறு செய்திருப்பான் என என்னால் நம்பமுடியவில்லை என்று அவர் கூறினார்.
நாங்களும் ஒவ்வொரு முறையும் சாக் துவான்ஜனின் செயலைப்  பொறுத்துக் கொண்டு  கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டோம். ஆனால், இந்த எல்லை மீறிய செயலால் போலீசிடம் புகார் அளித்ததாக பெற்றோர் தெரிவித்தனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker