Latestமலேசியா

கூரை மின் விசிறியில் மோதி 2 வயது குழந்தை மரணம் !

கோலாலம்பூர், ஜூன்.19 – மின் விசிறியில் தவறுதலாக மோதிய 2 வயது  குழந்தை ஒன்று படுகாயமுற்றதால் மரணமடைந்தது. இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமையன்று அம்பாங்கில் உள்ள அக்குழந்தையின் வீட்டில் நிகழ்ந்துள்ளது.

அன்றைய தினம்  வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர்  குழந்தையை வானை நோக்கி தூக்கி வீசி பிடித்து விளையாடி கொண்டிருந்தார். அப்படி தூக்கி வீசும் பொழுது அக்குழந்தை தவறுதலாக   கூரையில் பொருத்தப்பட்ட  மின் விசிறியில் மோதி படுகாயமுற்றது என அக்குழதையின் தந்தையான மியன்மார் பிரஜை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காயமடைந்த குழந்தையை அதன் தாயரும் சகோதரரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அக்குழந்தை இறந்து விட்டதாக அங்கு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அக்குழந்தையின் உடலில் சவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தலையில் ஏற்பட்ட படுகாயமே அக்குழந்தையின் மரணத்திற்கான காரணம் என அப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளைஞனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவன் வரும் ஜூன் 25ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

2001 சிறார் சட்டம் செக்‌ஷன் 31 (1) (ஏ) இன் கீழ் இந்த சம்பவத்திற்கான விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என காவல் துறை துணை ஆணையர் நூர் அஸ்மி யூசோப் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker