Latestமலேசியா

சட்டவிரோத உணவகம்- தகர்ப்பதை நிறுத்தி வைத்தது டிபிகேஎல்!

கோலாலம்பூர், ஜூன் 19 – சுற்றுப்பயணத் துறையில் பிரபலமான முகமட் முக்காராப்பின் மொக்தாருடின்,  லெம்பா பந்தாயில் நிர்மாணித்திருக்கும் உணவகத்தை அகற்றும் நடவடிக்கையை மாநகர் மன்றம் ஒத்திவைத்துள்ளது.

அந்த ஒத்திவைப்பு மறு அறிக்கை வரும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, அந்த ‘கியூ நூடல் என் கிரில்’ எனும் பெயரிடப்பட்ட அந்த உணவகம், டிபிகேஎல்.லின்  விதிமுறைக்கு மாறாகவும் அனுமதி இன்றியும் நிர்மாணிக்கப் பட்டதாகவும் அதனை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென்றும் முன்பு உத்தரவிட்டிருந்தது.

எனினும், பேச்சு வார்த்தைக்குப் பின்னர், அதனை அகற்ற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் நிர்மாணிப்புச் செலவு அதிகமென்பதால், வேறு இடத்திற்கு அதனைக் கொண்டு செல்ல ஏதுவாக கால அவகாசம் தரப்பட்டது.

அந்தக் கட்டடம்  விவசாய நிலத்தில்  கட்டப்பட்டு, அடுத்தவரின் நிலத்திற்கு வெகு அருகில் இருப்பதால் டிபிகேஎல் அனுமதியைத் தர மறுத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker