Latestஇந்தியா

ஜூலை 31ஆம் தேதி ஸாக்கீர் நாய்க் மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

மும்பை, ஜூன்.19- சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கீர் நாய்க் தன் மீது தொடுக்கப்பட்ட நிதி மோசடி வழக்கு விசாரணையில் வரும் ஜூலை 31ஆம் தேதியன்று நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவரை கைது செய்ய இந்தியாவின் தேசிய அமலாக்க பிரிவு பிணை இல்லாத கைது உத்தரவை பெற மீண்டும்  நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று  ஜூன் 19ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி,  இவ்விசாரணை தொடர்பில் வரும் அடுத்த மாதம் 31ஆம் தேதியன்று ஸாக்கீர் நாய்க் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவு கிடைக்கப் பெற்றதும் அந்நாட்டின் அமலாக்க பிரிவு, இண்டர்போல் சர்வதேச ஆணையத்திடம் அவருக்கு  “சிவப்பு நோட்டீஸ்” விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த “சிவப்பு நோட்டீஸ்” பெறுவதன் வழி , ஸாக்கீர் நாய்க் பெயர் இண்டர்போல் பங்காளித்துவ நாடுகளில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியலில் இணைக்கப்படும்.

மலேசியாவில் நிரந்திர குடியுரிமை பெற்ற ஸாக்கீர் நாய்க் தற்சமயம் இங்கு வசித்து வருகின்றார். தனது பங்காளித் துவ நாடுகள் பட்டியலில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளதால் அவரை மீண்டும் தாயகம் அனுப்ப இண்டர்போல் மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தும்.

இந்நிலையில் ஒரு வேளை ஸாக்கீர் நாய்க் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டால், அங்கு அவரின் நிலை என்னவாகும்? அவ்வழக்கு எப்படி நீதிமன்றத்தில் கையாளப்படும் என்பதனை  இந்திய அரசு முன் கூட்டியே நம்மிடம் தெரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் அவரை திரும்பி அனுப்பவது குறித்து நாம் முடிவெடுப்போம் என பிரதமர் துன் மகாதீர் அண்மையில் கருத்துரைத்திருந்தார்.

மேலும் மங்கோலியன் அழகி அல்தான்துயா மரண விவகாரத்தில் தேடப்பட்டு வரும் சிரூள் எனும் நபரை ஆஸ்திரேலியா அரசு மலேசியாவிற்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வரும் விவகாரத்தை இவ்விவகாரத்துடன் அவர் ஒப்பிட்டு சுட்டிக் காட்டினார். பிரதமரின் இந்த நிலைப்பாட்டிற்கு இந்திய குடிமக்கள் மட்டுமல்லாது மலேசியாவில் உள்ள சில தரப்புகளும் எதிர்மறை விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினர்.

தற்பொழுது ஸக்கீர் நாய்க்கை  திருப்பி பெறும் நடவடிக்கையில் இந்தியா ஒரு படி மேலே சென்றுள்ளது. இதனால் இவ்விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்திய நீதிமன்றத்தின் இந்த  தீர்ப்பு குறித்து மலேசிய அரசாங்கம் எந்தவொரு நிலைப்பாட்டையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker