Latestமலேசியா

டாக்சி – கிரேப் சேவை: பாராபட்சம் ஏன்? பிரதமர் அலுவலகத்தில் டாக்சி ஓட்டுனர்கள் மகஜர்!

புத்ரா ஜெயா, ஜூன்.19- கிரேப் –  டாக்சி  இரு வாடகை கார் சேவைகளுக்கும் உள்ள சட்ட திட்டங்கள் – விதி முறைகளில் பாடுகுபாடு வேண்டாம் எனக் கோரி நாடு தளுவிய அளவில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுனர்கள் ஒன்றினைந்து இன்று பிரதமர் அலுவலகத்தில் மகஜர் வழங்கினர்.

இன்று காலை 10 மணியளவில் புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் ஒன்று கூடி அவர்கள் வழங்கிய மகஜரை பிரதமரின் அரசியல் செயலாளர் அபு பாக்கார் யாயா பெற்றுக் கொண்டார்.

பொதுவாக டாக்சி – கிரேப் இரு வகை சேவைகளும் வாடகை கார் வசதியை தான் வழங்குகின்றன. ஆனால் இவ்விரண்டு சேவைகளுக்கும் அரசாங்கம் விதித்துள்ள சட்ட திட்டங்களிலும் விதிமுறைகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக டாக்சி வாடகை கார் ஓட்டுபவர்கள் பிஎஸ்வி எனப்படும் பிரத்யேக உரிமம் பெற்றிருத்தல் கட்டாயம்.

ஆனால் கிரேப் கார் ஓட்டுபவர்கள் சாதாரண வாகன உரிமம் கொண்டிருந்தால் மட்டும் போதுமானது. இதில் எங்கு சமநிலை உள்ளது? இது போல் பல விவகாரங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் டாக்சி ஓட்டுனர்களின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகின்றது. இது எங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது.

இதனை முன் வைத்து நாங்கள் எங்கள் பிரச்னையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்ல இன்று மகஜர் வழங்கியுள்ளோம் என அங்கு கூடியிருந்த டாக்சி ஓட்டுனர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker