Latestமலேசியா

நச்சு உணவு – 110 மாணவர்கள் பாதிப்பு

செர்டாங், ஜூன் 19 – நச்சு உணவை உட்கொண்ட காஜாங் பண்டார் ஶ்ரீ புத்ரா பல்கலைக்கழக் கல்லூரி ஒன்றின் 110 மாணவர்கள் செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

டிப்ளோமா, பட்டக் கல்வியின் அறிமுக வாரத்தில் பயிற்சியில் கலந்து கொண்ட 90 மாணவிகளும் 20 மாணவர்களும் வயிற்று வலி, வயிற்றோட்டம், வாந்தி போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.

அறிமுக வாரத்தின் நான்காவது நாளான  நேற்று ஜூன் 18ஆம் தேதி, வயிற்றில் வலி ஏற்பட்டதால், இரவு 8.30 மணியளவில் மாக்ரிப் தொழுகைக்குப் பின்னர், சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வாரத்தில் மாணவர்களுக்கான உணவு யாவும் வெளியிலிருந்து வரவழைக்கப் பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின்னர், மாணவர்கள் தேறி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker