Latestசினிமா

நள்ளிரவில் நடிகையை வழி மறித்து தாக்குதல் நடத்திய கும்பல் கைது!

கொல்கத்தா, ஜூன்.19- முன்னாள் மிஸ் இந்தியா அழகியும்  நடிகையுமான உஷோஷி சென்குப்தா தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடிகை  உஷோஷி, பணி முடிந்து நள்ளிரவில் சக கலைஞர்களுடன் உபர் கால் டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.

இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் ஒன்று வழிமறித்தாகவும் ஓட்டுனரை தாக்கியதாகவும் பேஸ்புக்கில் நடிகை உஷோஷி பதிவிட்டுள்ளார்.

அந்த முகநூல் பதிவில் தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அருகில் காவல் நிலைய இருந்தும் போலீஸார் உதவிக்கு வரவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்லார்.

வெகு தாமதமாக போலிசார் வந்தபோது அந்த நபர்கள் அவர்களை தள்ளி விட்டு தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார். நடிகை வீடியோ பதிவின் அடிப்படையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker