Latestமலேசியா

பசைக் கலனை முகர்ந்தப்படி சிறுவன் மரணம் !

போர்ட்டிக்சன், ஜூன்.19- நாற்காலியில் அமர்ந்து பசைக் கலனை  முகர்ந்து கொண்டிருந்த படியே 14 வயதுடைய சிறுவன் ஒருவன் மரணமுற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் போர்ட்டிக்சனின் ஜாலான் பந்தாய் எனுமிடத்தில் உள்ள பசார் மாலம் தளத்தில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அவ்விடத்திற்கு விரைந்தனர்.

அங்கு இச்சிறுவன் நாற்காலியில் அமர்ந்தது பிளாஸ்டிக் கலனை முகர்ந்து கொண்டிருந்தப்படி இருந்தான். ஆனால் அவன் உடலில் உயிர் இல்லை. அந்த கலனில் பசை இருந்தது பின் தெரிய வந்தது.

அச்சிறுவன் பகாவ் பகுதியைச் சேர்ந்தவன் என  போர்ட்டிக்சன் மாவட்ட காவல் தலைமையத்தின் தலைவர்  சூப்ரிண்டண்ட் அய்டி ஷாம் முகமட் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மரணத்திற்கான விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில் இதில் குற்றச் செயல்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை . அதே வேளை இச்சிறுவன் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்தில் பசையை முகர்ந்த குற்றத்திற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் அவர் குறிப்பிட்டதாக தகவல் கூறுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker