Latestஇந்தியா

பிக்பாஸ் 3 -க்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை,ஜூன்.19- பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இம்மனு தாக்கல் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பிரபலங்களை வீட்டுக்குள் அடைத்து வைத்து 100 நாட்கள் 60 கேமராக்கள் மூலம் அவர்களது நடத்தையை ரசிகர்கள் காணும் வகையில் நடக்கும் ரியாலிட்டி ஷோ உலகம் முழுவதும் பிரபலமானது.

இந்தியில் பல மொழிகளிலும் பிரபலமாக ஆண்டுக்கணக்கில் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு தற்போது மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து வருகின்றனர். இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசப்படுகின்றன. இது இளைஞர்களையும் பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

எனவே இந்தியன் புரோகாஸ்ட் பவுண்டேஷன் (IBF) தணிக்கை சான்றிதழ் பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker