Latestமலேசியா

போக்குவரத்து அமைச்சின் முன் வாடகை கார் ஓட்டுனர்கள் மறியல்!

புத்ராஜெயா, ஜூன். 19- புத்ராஜெயாவில் உள்ள போக்குவரத்து அமைச்சின் அலுவலகத்தின் முன்னால் நூற்றுக்கணக்கான வாடகை கார் ஓட்டுநர்கள் திரண்டு நின்று தங்களின் ஆட்சேபத்தை காட்டும் வகையில் மகஜர் ஒன்றை போக்குவரத்து அமைச்சர் அல்லது துணை அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்ற திட்டத்தில் தோல்வி கண்டனர்.

அந்த மகஜரை  பெற்றுக்கொள்ள போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளர் தஹ்லான் மாமோர் வந்திருந்தபோது டாக்ஸி ஓட்டுநர்களுக்கான சம்மேளனத்தின் தலைவர் கமாருடின் ஹுசைன், அந்த மகஜரை அவரிடம் வழங்க மறுத்துவிட்டார். அவரை விட அதிக அதிகாரம் கொண்ட அதிகாரி ஒருவரிடமே தாம் அதனை வழங்க முடியும் என்று அவர் கூறிவிட்டார்.

மலேசியாவில் இணையம்வழி வாடகை கார் சேவையை நடத்தும் தொழில் ஆக்கிரமித்து வருவதோடு அதற்கு அமைச்சு ஆதரவாக வாடகைக் கார் ஓட்டுனர்களை ஓரம் கட்டுவதாகவும் Gabungan Teksi SeMalaysia என்ற அந்த சம்மேளனம் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

இங்கு திரண்டிருந்த வாடகை கார் ஓட்டுனர்கள், சிலர் தங்களுடைய கைகளில் சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர். ‘துன் மகாதீர் அவர்களே, எங்களின் பிழைப்பை பாதுகாக்க தயவு செய்து உதவுங்கள்” என்று கூறும் வகையிலான சுலோக அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.

இதனிடையே இந்த ஆட்சேபம் மறியல் குறித்து கருத்துரைத்த அமைச்சர் அந்தோணி லோக்கின் அரசியல் செயலாளர் தஹ்லான், அமைச்சு ஒருபோதும் இந்த வாடகை கார் ஓட்டுனர்களை புறக்கணிக்கவில்லை என்றும் மாறாக, அவர்கள் மாறிவரும் தொழில்நுட்பத்தை கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் இப்போது என்ன நடக்கிறது என்ற மேம்பாட்டினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் டாக்சி ஓட்டுனர்கள் இணையவழி சேவை ஓட்டுநர்களோடு போட்டியிட வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் இந்த வாடகை கார் ஓட்டுனர்களுக்கு இணையவழி சேவை நடத்துபவர்களை காட்டிலும் கூடுதலான சாதகங்கள் உள்ளன. குறிப்பாக, சாலை டோல் கட்டணங்கள் மிகக் குறைவாகவே விதிக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker