Latestஉலகம்

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்! – ஈரான்

தெஹ்ரான், ஜுன்.20-  ஈரானின் வான்வெளிக் ஊடுருவிய அமெரிக்காவின் டிரோன் எனப்படும் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் தெற்கு கடலோர மாநிலமானஹோர்மோஸ்கானில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட QR C4 குளோபள் ஹவ்க் என்ற ஆளில்லாத விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரானின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஈரானிய வான்வெளியில் எந்தவொரு அமெரிக்க விமானங்களும் இயங்கவில்லை என்று அமெரிக்க தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.  ஈரானின் கூற்றை மறுத்துள்ள அமெரிக்கா,  அனைத்துலக வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ 4C டிரிட்டோன் என்ற உளவு விமானத்தை நோக்கி ஈரானிய ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக கூறியுள்ளது.

இந்த  MQ 4C  ஆளில்லாத விமானம் கிட்டத்தட்ட 50 ஆயிரம் அடி உயர உச்சவரம்பில் மட்டுமே பறக்கக் கூடியது. ஈரானியர்கள் குறி வைக்க முடியாது என்றும் அது சுட்டிக் காட்டியது’

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker