Latestமலேசியா

அமைச்சர் வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி !

பெட்டாலிங் ஜெயா, ஜூன். 20 – மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் குவா மூசாங் பகுதியில் உள்ள கம்போங் கோலக் கோ பகுதியில் சுமார் இரண்டு வார காலமாக தங்கியிருந்த பின் புத்ராஜெயாவிற்கு திரும்பிய பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி உடல் நலக் குறைவினால் இன்று காலை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு காய்ச்சல், வாந்திபேதி, சளி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு நோய்க்கான காரணத்தை கண்டறிய சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவரால் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது. அறிவிப்பு வரும் வரை இந்த வாரத்திற்கான அவரது பணிகள் யாவும் ஒத்திவைக்கப்படும் என அமைச்சரின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் அந்த கம்போங் கோலக் கோ பகுதியில் அடுத்தடுத்து 15 பேர் மர்ம நோயினால் மரணமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் தட்டம்மை நோயினால் மரணமடைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 12 நபர்களின் மரணதிற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் அமைச்சர் சுமார் 4 நாட்களுக்கு முழுவதுமாய் அவ்விடத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker