Latestமலேசியா

அழுகிய நிலையில் ஓய்வுப் பெற்ற ஆசிரியரின் சடலம்

பத்து பெரண்டாம், ஜூன்.20 – பணி ஓய்வுப் பெற்ற ஆசிரியர் ஒருவர், இறந்து 5 நாட்களாகிய,  நிலையில் அவரின் வீட்டில் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

தாமான் ஆரா பெர்மாயின் குடியிருப்பு பகுதியில் அவரின் வீட்டின் சமையலறையில் இருந்த சாய்ந்த நாற்காலியில் சாய்ந்த நிலையில் இறந்து கிடந்தாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் அதிகாரி அவ்சனிசார் அகமட் தெரிவித்தார்.

நீண்ட நாட்கள் ஆகியும், அந்த முதியவர் வீட்டை விட்டு வெளியே வராததைக் அவரின் அண்டை வீட்டார் ஒருவர் கண்காணித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, தூர்நாற்றமான தண்ணீர் வெளியே வருவதைக் கண்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாக தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்து சுமார் காலை 11.20 மணியளவில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போது, அம்முதியவர் நாற்காலியில் அமர்ந்தவாறு, இறந்து கிடந்ததாக அவ்சனிசார் அகமட் தெரிவித்தார். மேலும், விசாரணையில் அவர் திருமணம் ஆகாதவர் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அவரின் உடலை பரிசோதித்து பார்த்ததில் தாக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை  என உறுதிசெய்யப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனைக்காக அம்முதியவரின்  உடல் மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker