Latestமலேசியா

‘அவதூறு புத்தகம்’: விசாரிக்கும் படி போலீசுக்கு அன்வார் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20 – அன்வார் ஏன் பிரதமராகக் கூடாது என எழுத்தாளர் ஒருவர் தம்மைப் பற்றிப் புத்தகம் எழுதியிருப்பதைப் போலீசார் விசாரிக்க வேண்டுமென அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். அந்த எழுத்தாளரைப் பற்றி சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் போலீசில் புகார் செய்துள்ளார்.

அவர் தமது புகாரில், அந்த எழுத்தாளர் தம்மைக் கண்டு, அன்வாரிடம் பேச ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும்,  அன்வாருக்கு எதிராகப் புத்தகம் எழுத தமக்கு 400,000 ரிங்கிட் தரப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அன்வார் அதற்கு மேலும் ஒரு கணிசமான தொகையைத் தந்தால், அந்தப் புத்தகத்தைப் பிரசுரிக்காமல் நிறுத்திக் கொள்வதாகக் தெரிவித்திருக்கிறார்.

அவர், எழுதியிருக்கும் புத்தகத்தில் அன்வார் ஏன் பிரதமராக முடியாது என்பதற்கான காரணங்கள, அவரைப் பற்றிய அவதூறுகள், ஓரினப் புணர்ச்சி, ஊழல், யூதர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏஜெண்டு போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார்.

இந்த விவகாரத்தைப் போலீசார் தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்வார் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker